--> Skip to main content

டி.இ.டி தமிழ் வினா - விடை: திருவருட்பா

ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடத்திற்கான வினா - விடைகள்வாழ்த்து: திருவருட்பா

* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்

* சிறப்பு பெயர் -  திருவருட்பிரகாச வள்ளலார்

* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூர்

* பெற்றோர் -  இராமையா - சின்னமையார்

* வாழ்ந்த காலம்: 05.10.1823 முதல் 30.01.1874

* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.

* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை

* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை

* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.

* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.

* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்

* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.

* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும்"உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்


Think every SecondAct every MinutePersevere every MomentEnd every day in Success


விநாடிகள் தோறும் சிந்திப்போம்!நிமிடங்கள் தோறும் செயல்படுவோம்!மணிகள் தோறும் போராடுவோம்!தினந்தோறும் வெற்றி பெறுவோம்!


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar